State Council of Education Research and Training Tamil Nadu
     

மாநிலக்கல்வியியல்  ஆராய்ச்சி  பயிற்சி   நிறுவனம்  தமிழக  அளவில்  ஆசிரியர் கல்வி, பள்ளிக்  கல்வியின் கலைத்திட்டம்   மற்றும்  பாடத்திட்ட  மறுசீரமைப்பு  பணிகளையும் கல்விப் பயிற்சிகளையும் வடிவமைத்து செயல்படுத்தி வரும் தலைமை  நிறுவனம்  ஆகும்.  இம்மாநிலக் கல்வியியல்  நிறுவனமானது  தமிழகம்  முழுவதும்  கல்வி  உரிமைச்  சட்டத்தினை செயல்படுத்துவதில்   முன்னோடியாகத்  திகழ்கிறது.  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கிடையே  தொடர்புகளை ஒருங்கிணைத்து  அவற்றை  மேம்படுத்த உதவும் பணியை  இந்நிறுவனம் சிறப்புற செய்து வருகிறது.  கல்வித்துறையின்  பல்வேறு நிலை அலுவலர்களின்  பணித்திறன் மேம்பட்டினை  ஊக்குவித்தலும்,  ஆசிரியர்கள் மற்றும்  பயிற்சியாளர்களுக்கான கல்விப் பயிற்சிகளை  வழங்கும்  பல்வேறு  நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.  ஆசிரியர் கல்வி  மற்றும் பள்ளிக் கல்வி தொடர்பான மதிப்பீட்டு  நிகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சி களை திறம்பட  மேற்கொண்டு வருகிறது.